பத்து வயதுச் சிறுவன் துஸ்பிரயோகம் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயது இளைஞன் மருதங்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. சிறுவனின் தந்தை கடற்றொழிலில் ஈடுபட்டு கரை வந்தவேளை தனது தந்தையாரிடம் சென்ற சிறுவனை
மாமுனை கிராமத்தை சேர்ந்த 32 வயது இளைஞன் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பபட்டுள்ள நிலையில் குறித்த மாமுனையைச் சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக மருதங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர்.