யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
யாழ் தென்மராட்சி மிருசுவில் வடக்கு பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் தனது விவசாய நிலத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அவர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.