சிறப்பு பிரிவு கைதிகளை ஏற்றிச்செல்லும் சிறைச்சாலை பஸ்களில் CCTV கமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில் பஸ்களில் இவ்வாறு CCTV கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி B திசாநாயக்க தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் வௌியில் அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் இதனூடாக கண்காணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
பஸ்ஸிற்குள் கைதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பிலும் இதனூடாக கண்காணிக்க சந்தர்ப்பம் கிடைக்குமென சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சில சந்தர்ப்பங்களில் வௌியில் இருந்து பஸ்ஸிற்குள் போதைப்பொருளை வீசும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிறைச்சாலைகளில் தற்போது போதைப்பொருட்களுக்கு அடிமையான சுமார் 14,500 பேர் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.