12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை நாட்டுக்கு கொண்டுவந்த இந்திய பெண்ணொருவர் கட்டுநாயக்க சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
5.5 கிலோகிராம் நிறையுடைய தங்கம் இதன்போது கைப்பற்றப்பட்டதாக சுங்கப்பேச்சாளர் சீவலி அருங்கொட தெரிவித்தார்.
துபாயில் இருந்து குறித்த பெண் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இடுப்பு பட்டி மற்றும் கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
35 வயதான பெண் கண்டியில் வசிக்கும் நபரை திருமணம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.