செக் குடியரசின் தலைநகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 14 பேர் கொல்லப்பட்டதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் கலைப்பீட வளாகத்திற்குள் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் துப்பாக்கிதாரியின் தந்தையும் அடங்குவதாக சந்தேகிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் இருவர் உயிரிழந்தமை இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணமாக இருக்கலாமென கருதப்படுகின்றது. துப்பாக்கிதாரியும் இறுதியில் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் செக்.குடியரசில் நாளைய தினத்தை தேசிய துக்கதினமாக செக். குடியரசு ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார். செக். குடியரசில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.