பிரான்ஸின் புதிய பிரதமராக Gabriel Attal நியமனம் பெற்றுள்ளார். பிரான்ஸ் வரலாற்றில் மிகவும் வயது குறைந்த பிரதமராக Gabriel Attal பதிவாகியுள்ளார்.
கடந்த 20 மாதங்களாக பிரதமராக பதவி வகித்த Élisabeth Borne இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனால் இவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை கல்வியமைச்சராக பதவி வகித்த Gabriel Attal பிரதமராக நியமிக்கப்பட்டமை அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல்கள் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், பிரான்ஸ் அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பு Gabriel Attal இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தைக் கொண்டு தமது ஜனாதிபதி பதவியை மீளாய்வு செய்வதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இலக்கு வகுத்துள்ள நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸின் நவீன வரலாற்றில் மிகவும் வயது குறைந்த பிரதமராக Laurent Fabius இடம்பிடித்திருந்தார். 1984 ஆம் ஆண்டு ஜனாதிபதி François Mitterrand- ஆல் பிரதமராக நியமிக்கப்படும் போது அவருக்கு 37 வயதாகியிருந்தது. தற்போது அவரை விட வயது குறைந்த பிரதமராக Gabriel Attal பதிவாகியுள்ளார்.