ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
விருப்பு வாக்கு பட்டியலுக்கமைய, இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, பாராளுமன்றத்தில் இன்று நிகழ்த்திய விசேட உரையில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சமிந்த விஜேசிறி பதவி விலகல் கடித்தைக் கையளித்துள்ளார்.