இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஆன் இலங்கையை வந்தடைந்துள்ளார். இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் இன்று புதன்கிழமை நாட்டை வந்தடைந்தார்.
அதன்படி அவர் இம்மாதம் 13ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை – பிரித்தானிய உறவின் 75ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு அவரது இந்த விஜயம் அமைந்துள்ளது.
மறைந்த எலிசபெத் மஹாராணியாரின் இரண்டாவது மகளும் ஒரேயொரு பெண் வாரிசும் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் ஒரே ஒரு சகோதரியும் இவர் என்பது குறிப்பித்தக்கது.