தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரியான 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளே தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்காவிலிருந்து மடபாத்த ஜபுரலியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த சிலர் அவரது கழுத்தை அறுத்துவிட்டு சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் குறித்த பெண்ணை வேத்தரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.