பாரிய மண்சரிவு காரணமாக பதுளை-கொழும்பு பிரதான வீதி நேற்று செவ்வாய்க்கிழமை (09) இரவு தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த வீதியினூடான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வீதியை கடந்து பதுலு ஓயாவில் விழுந்த மண்சரிவினால் அந்த இடம் முற்றாக தடைப்பட்டுள்ளது.
தற்போது பதுளையில் இருந்து உடுவர வரையிலும், பண்டாரவளையில் இருந்து உடுவர வரையிலும் பஸ் சேவை நடைபெறுகிறது. அடம்பிட்டிய பண்டாரவளை வீதியை மாற்று வழியாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.