முல்லைத்தீவில் நான்கு நாட்களாக காணாமல் போன இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு!
முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் உள்ள தென்னந் தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
லோகராசா ராஜினி எனும் 39 வயதான பெண்ணே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.