எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை அதிகரிக்கவுள்ளதாக கியூபா அரசாங்கம் அறிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எரிபொருள் விலையுடன் கூடுதலாக மின் கட்டணத்தையும் 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என கியூபா அரசு அறிவித்துள்ளது.
11 மில்லியன் மக்கள் வசிக்கும் கியூபா, 1990க்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது சந்தித்து வருகிறது.
நாட்டில் பணவீக்கமும் வேகமாக அதிகரித்துள்ளதோடு, எரிபொருள் விலையை 500 வீதத்தால் அதிகரிப்பதன் மூலம் நிலைமை மேலும் மோசமாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.