முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட பெண். தானே கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்!
முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் தோட்டக்காணி ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. யோகராஜா ராஜினி எனும் 36 வயதான பெண் ஒருவர் 08.01. 2022 அன்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
நான்கு நாட்களாக குறித்த பெண் காணாமல் போன நிலையில் தோட்டக் காணியில் காணப்பட்ட கைப்பையை அடுத்தே கிணற்றில் சடலம் இருப்பது இனங்காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் தலையில் காயம் உள்ளமையும் நீரில் மூழ்கியதில் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து தானே கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக கணவர் பகீர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். முரண்பாடு ஏற்பட்டதாகவும் அதனால் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார். முல்லைத்தீவு பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் கணவரைப் பிரிந்து வேறு ஆண் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார். 22,16 வயதுடைய பிள்ளைகள் உள்ளனர். கிளிநொச்சியைச் சேர்ந்த 33 வயதான ஆண் ஒருவருடன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.