கோத்தபாய அரசு கவிழ்வது உறுதி என்கிறார் விமல்!
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் அரசு தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லையெனில் அரசு கவிழ்வது உறுதி. அது எப்போது கவிழும் என இப்போது கூறமுடியாது என அரசின் பங்காளிக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர்களை நீக்குவதாலோ அமைச்சர்களை நீக்குவதாலோ நெருக்கடியை நீக்க முடியாது. நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் மக்களின் மனதை வெல்லும் வகையில் செயற்படவேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. அதற்காகவே பாடுபடுகிறோம். வெளியாட்களுடன் சேர்ந்து அரசை வீழ்த்துவது எமது நோக்கமல்ல.
அரசு தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் கவிழ்வது உறுதி. ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து ஆழமாகச் சிந்தித்து பயனுள்ள தீர்மானத்தை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.