சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் பெரியப்பா (தந்தையின் அண்ணா) கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபர் குளிர்பானத்தில் மயக்க மருந்தினை கலந்து சிறுமிக்கு அதனை கொடுத்து சிறுமியை வன்புணர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.