பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை ஈரான் நேற்று(16) நடத்தியது.
இத்தாக்குதல் இரு நாட்டு உறவில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள விரிசலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் தரப்பில் இத்தாக்குதல் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் அல்-அதில், ஈரானையொட்டிய, பாகிஸ்தான் எல்லையிலிருந்து செயல்பட்டு வருகிறது.
ஈராக்கில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.