அரச தாதியர் அதிகாரிகள் சங்கத்தினரால் நேற்று(17) காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று(18) காலை 07 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே, வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் விசேட கலந்துரையாடல் இன்று(18) இடம்பெறவுள்ளது. இந்த சம்மேளனத்தில் 72 தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டிய தெரிவித்துள்ளார்.