கொழும்பில் உள்ள சிசிரிவி கெமராக்கள் மூலம் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணப்பட்டு அபராத சீட்டு வாகன உரிமையாளருக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி முதல் இம் முறைமை நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.