இரண்டு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகாண்டாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு, G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உகாண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவெனியின் (Yoweri Museveni) அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு, “உலகளாவிய கூட்டு செழுமைக்கான ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தல்” எனும் தலைப்பில் நாளையும் (19) நாளை மறுதினமும் (20) உகாண்டாவின் Kampala நகரில் நடைபெறவுள்ளது.
அதனையடுத்து, ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் “எவரையும் கைவிடக்கூடாது” என்ற தலைப்பில் G77 மற்றும் சீனாவின் 03 ஆவது தென் மாநாடு, Kampala நகரில் நடைபெறவுள்ளது.