மத்திய சீனாவின் யாங்ஷாங்புவில் உள்ள பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (19) இரவு தங்கும் விடுதியில் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் தரம் 3இல் கல்வி கற்கும் மாணவர்களே உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் இது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் பாடசாலை விடுதியில் தங்கும் மாணவர்கள் பெரும்பாலோனோர் கிராமப்புறங்களில் இருந்து வருகைதரும் மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தனியார் பாடசாலையின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.