ஐ.பி.எல் 2024 தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் மே 19 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
ஐ.பி.எல் தொடருக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற பெருமையை
அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் பெற்றார்.
இந்நிலையில், ஐ.பி.எல். தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமையை எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு வரை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளது.
இதற்காக ஒவ்வொரு சீசனுக்கும் தலா ரூ.500 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.