கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றுக்கு காரில் வந்த இனந்தெரியாத நால்வர் தேரர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தேரர் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.