மேலதிக வாக்குகளால் நிகழ்நிலை சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை (23) மற்றும் இன்று புதன்கிழமை (24) நடைபெற்ற நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் மீதான விவாதத்தின் பின்னர், இன்று புதன்கிழமை (24) மாலை வாக்கெடுப்புக்கு விடுக்கப்பட்டது.
சட்டமூலத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு, எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிநின்றார்.
அதன்பின்னர் வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டது. சபைக்கு வெளியே இருந்த எம்.பிக்கள்,சபைக்குள் பிரவேசித்தனர் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதனடிப்படையில், மேலதிக வாக்குகளால் நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.