கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் மீட்பு!
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் இருவரின் சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.கிரானைச் சேர்ந்த ஜீ சுஜாநந்தன் (16), ச. அக்சயன் (16) ஆகிய மாணவர்களின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.
தைப்பொங்கல் தினத்தன்று பாடசாலை விடுமுறை என்பதால் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் ஏழுபேர் கடலில் நீராடியுள்ளனர்.இதன்போது மூன்று மாணவர்கள் கடல் அலையில் சிக்கிய நிலையில் ஒரு மாணவன் மீட்கப்பட்டுள்ளார். இரண்டு மாணவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன மாணவர்களை உள்ளூர் மீனவர்கள், சுழியோடிகளுடன் இணைந்து கடற்படையினரும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை கடலில் மூழ்கி காணாமல் போன மாணவர்கள் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.