By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பொதுச்செயலாளர் பதவிக்கும் தமிழரசுக் கட்சியில் தேர்தல்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பொதுச்செயலாளர் பதவிக்கும் தமிழரசுக் கட்சியில் தேர்தல்!

Published January 26, 2024
Share
1 Min Read
SHARE

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், தேர்தல் மூலமே தெரிவாக வாய்ப்புள்ளதாக அந்தக் கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது.

அத்துடன், பொதுச்செயலாளர் பதவிக்கு வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 6 பேர் போட்டியிடத் தயாராகி வருகின்றனர் என்றும் தெரியவருகின்றது.

இதன் மூலம், தேர்தல் இன்றியே இதுவரை காலமும் பொதுச்செயலாளர் தெரிவு செய்யப்பட்டு வந்த சம்பிரதாயமும் மாற்றமடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தலைவர் பதவியை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் வகித்தால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவருக்குப் பொதுச்செயலாளர் என்ற மரபும் மாற்றமடைய சந்தர்ப்பம் உள்ளது. அண்மையில், தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கும் மரபை மாற்றி தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவஞானம் சிறீதரன் வெற்றி பெற்று தலைவராக உள்ளார். இந்தநிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் தேர்தல் மூலம் தெரிவானால் 75 ஆண்டுகள் வரலாற்று பாரம்பரியம் கொண்ட அந்தக் கட்சியின் மரபு மாற்றமடையலாம்.

இதேநேரம், தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் சிறீதரனின் வெற்றிக்காக உழைத்தவர்கள் மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனை முன்மொழிந்துள்ளனர்.

எனினும், பொதுச்செயலாளர் பதவிக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கி.துரைராஜசிங்கம், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சேவியர் குலநாயகம் ஆகியோரும் போட்டியிடத் தயாராகி வருகின்றனர்.

எனினும், பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மத்திய குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் என்பது நினைவில்கொள்ளத்தக்கது.

Editor S.Shanuja January 26, 2024 January 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்துங்கள்!- ஆதரவு கோருகிறது பல்கலை ஒன்றியம்
Next Article பெலியத்தை துப்பாக்கிச் சூடு; மேலும் இருவர் கைது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?