அனைவருக்கும் வணக்கமுங்கோ! இன்றைய பொழுது அனைவருக்கும் நல்லா பொழுதாய் அமைய துடியன் பிரார்த்திக்கிறான்.
சமூக வலைத்தளங்களுக்கு போவதை விட போனை தூக்கி உடைச்சுப்போட்டு பேசாமல் படுக்கலாம் என நிறைய இளசுகள் முகம்சுழிக்கினம்.
எண்ணன்டு கேட்டால் முகப்புத்தகம் புரா உந்த தமிழரசு கட்சியின்ட தலைவர் தெரிவில ஆரம்பிச்சதுங்கோ இன்னும் முடியலையுங்கோ. தலைவரையும் தெரிஞ்சாச்சு ஆனால் விசுவாசிகளின் நச்சரிப்புக்கள் தாங்க முடியல்ல.
இண்டைக்குத்தான் தமிழரசு கட்சியின்ட முக்கிய தெரிவுகள் இடம்பெறவுள்ளதாம். கட்சியின் உயர்மட்டங்கள் திருகோணமலையில் முகாமிட்டு தலைவருக்கு ஓரே நச்சரிப்பாம்…
சிறீதரன் ஐயாவை தலைவர் ஆக்க சிலர் கடுமையாக வேலை செய்தவை. அவை இப்பத்தான் ஏன் இப்படி வேலை செய்தவை எண்டு ஐயாவிற்கும் விளங்கும். ஒருதரும் தனக்கு விசுவாசத்தில வேலை செய்யல தங்களுக்காகத்தான் வேலை செய்திருக்கிக்கனம் எனம் ஐயா மனசுக்குள்ள புலாங்கிப்பது துடியனுக்கு விளங்குது..
சிறிநேசனை பொதுச்செயலாளர் ஆக்குரது தான் சிறீதரன் ஐயாவை ஆதரிச்சவைன்ட நிலைப்பாடு. ஆனால் இப்ப ஆறு பேர் செயலாளர் பதவிக்கு ஆசைப்படுவதாக ஒரு தகவல் உலாவுதங்கோ.
அதில சுமந்திரன் ஐயாவை ஆதரிச்ச குகதாசன், குலநாயகம் ஆகியவர்களின் பெயர்தான் அடிபடுது. உபதலைவராக கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவராம். பொருளாலராக அம்பாறையைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஒருவராம் எண்டு கதை போகுது.
அதுக்குள்ள சிலர் தனக்கு அந்தப்பதவி வேண்டாம் இணைத்தலைவர் பதவியத்தாங்கோ எண்டு தலைவர நச்சரிக்கினமாம். புதியதலைவரின் வெற்றிக்கு இரவு – பகலாய் தான் உழைச்சவர் எண்டு சொல்லிக்கொள்ளும் கனடா நாட்டு குடியுரிமையுடைய ஒருவர் பொருளளார் பதவி வேண்டும் எண்டு தலைவருக்கு அரியண்டம் குடுக்கத் தொடங்கியிருக்கினம்.
எல்லாத்தைப்பார்த்தாலும், ஒருவரும் கட்சிக்காண்டிக்கும் இல்ல, தமிழ் மக்களுக்காகவும் இல்ல, தங்களுக்காகத்தான் திரிஞ்சிருக்கினம் எண்டு சனம் திட்டத்தொடங்கியிருக்குங்கோ.
போறப்போக்கைப் பார்த்தால் இண்டைக்கும் திருகோணமலைல வாக்கெடுப்புக்கள் நடக்கப்போகுது போலதான் கிடக்குதுங்கோ… இல்லா மண்டைகள் உடையப்போகுதோ தெரியல… எதுக்கும் ஓரமாய் இருந்து பார்ப்பமுங்கோ…
இண்டைக்கு என்ன எல்லாம் நடக்குது எண்டு துடியன் நாளைக்கு வந்து சொல்லுறனுங்கோ!
துடியன் நாளைக்கும் வருவான்….