நான்கு வயது மற்றும் ஏழு வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்பட்டதால் போதையான இரண்டு சிறுவர்களும் சிகிச்சைக்காக தாயரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம், ஏழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஒன்று விட்ட சகோதரனால் குறித்த இரண்டு சிறுவர்களுக்கும் வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்பட்டுள்ளது.
மதுபோதைக்கு உள்ளான சிறுவர்கள் இருவரும் தாயரால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.