கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பொது நூலகத்திற்கு அருகாமையில் பொலிஸார் பல முறை நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.