கல்விக் கட்டணம் செலுத்த பணமில்லை, மாணவி தற்கொலை!
கல்விக் கட்டணம் செலுத்த பணமில்லாத நிலையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை கழுவன் திட்டைச் சேர்ந்த ஜஸ்டின் பிரின்சி எனும் 19 வயது மாணவியே வீட்டு மின்விசிறியில் தூக்கில் தொங்கி உயிர் மாய்த்துள்ளார். இவர் தனியார் டிப்ளமோ கல்லூரியில் கல்வி கற்று வருகிறார்.
கல்லூரியில் கட்டணம் செலுத்த வேண்டிய இறுதி திகதி வந்ததால் வீட்டில் பணம் கேட்டுள்ளார். வீட்டில் வறுமை நிலை காரணமாக பணம் கொடுக்கவில்லை. மூத்த சகோதரிக்கு கடன் பட்டு திருமணம் முடித்து வைத்ததால் குடும்பத்தில் வறுமை நிலை நீடித்ததாக அயலவர்களால் கவலை தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் கல்விக் கட்டணம் செலுத்த பணமில்லாமல் மாணவி ஒருவர் உயிரிழந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.