இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரித்து புதிய விலை 371 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.
இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 363 ரூபாவாகும்.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 468 ரூபாவாகும்.
அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 26 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 262 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.