இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையை தவறாக பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பல ஏமாற்றுபேர்வழிகள் தொழில் நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையை தவறாகப் பயன்படுத்தி நடத்தப்படும் மோசடி நடவடிக்கை தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது போன்ற ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
இவ்வாறான தொழில்களுடன் இலங்கை மத்திய வங்கிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதையும் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் குறுகிய கால கடன் வசதிகள், வேலை வாய்ப்புக்கள் மற்றும் பரிசுத் தொகைகள் என்று மத்திய வங்கியின் இலட்சினையைப் பயன்படுத்தி போலி விளம்பரங்கள் பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.