By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: நடிகர் விஜய்க்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

நடிகர் விஜய்க்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து!

Published February 3, 2024
Share
2 Min Read
SHARE

“சினிமா ஊடாக இரசிகர்களின் மனம் வென்ற தளபதி விஜய், அரசியல் ஊடாகவும் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயற்படுவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

எனவே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,

“நடிகர் விஜய் சினிமா துறையில் உச்சம் தொட்டவர். அவருக்கென இரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தளபதியென இரசிகர்கள் அவரை கொண்டாடும் அளவுக்கு சினிமாத்துறையில் நேர்த்தியாகவும், நேர்மையாகவும் நடத்துகொண்டுள்ளார்.

அதுமட்டுமல்ல தனக்காக உருவான ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அதன் ஊடாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வந்தார்.

இந்நிலையில் அப்பணிகளை மென்மேலும் முன்னெடுப்பதற்காகவும், சமத்துவம், சமூக நீதிக்காகவும் விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றி கழகமாக அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.

சினிமாவில் உள்ள செல்வாக்கை மட்டும் பயன்படுத்தி எடுத்தோம், கவிழ்த்தோம் என அரசியல் பயணத்தை ஆரம்பிக்காமல் நன்கு திட்டமிடலுடன் அப்பயணத்தை விஜய் ஆரம்பித்துள்ளார் என்பது அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மூலம் உறுதியாகின்றது.

நல்லாட்சி, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை மையப்படுத்தியமாக அரசியல் பயணம் அமையும் என விஜய் அறிவித்துள்ளதை வரவேற்கின்றோம். இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு சமத்துவம், சமூக நீதியை வலியுறுத்தியே எமது அரசியல் பயணமும் தொடர்கின்றது. அந்தவகையில் மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான பயணத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பயணம் வெற்றியளிக்க மலையக மக்கள் சார்பிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இணைந்து பயணிக்ககூடிய இடங்களில் இணைந்து பயணிக்கவும், புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டிய இடங்களில் புரிந்துணர்வுடன் செயற்படவும் நாம் தயாராகவே இருக்கின்றோம் என்ற செய்தியையும் விஜய்க்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளேன்.” – என்றார்.

Editor S.Shanuja February 3, 2024 February 3, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பரசூட் சாகசம்; இராணுவ தளபதிக்கு கௌரவிப்பு!
Next Article 15 கிலோ கஞ்சா; யாழில் ஒருவர் கைது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?