இலங்கை சுதந்திர தின எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்!
இலங்கையின் 76 வது சுதந்திர தினமான இன்று சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டித்து எதிர்ப்பு பேரணி கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.