பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் தனியார் ஒருவரின் விவசாய நிலத்தில் விவசாய உபகரணங்கள், மற்றும் தற்காலிக வீடு என்பன அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
முகமாலையில் அண்மைக்காலமாக இவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு பலதடவைகள் அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, முகமாலைப்பகுதிகளில் விவாசாய மக்களின் விளைபயிர்கள் மற்றும் அவர்களது உடமைகள் சேதமாக்கப்படுவதை உடனடியாக தடுத்தி நிறுத்தி தமது வாழ்வாதர தொழிலை மேற்கொள்வதற்கு பொருத்தமான சூழலை உருவாக்கித்தருமாறு உரிய தரப்பினரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.