தமிழரசு மாநாட்டுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை: அம்பலமான சதிகாரர்கள்!
தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு திருகோணமலை நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது தீர்ப்பு வழங்கியது.
திருகோணமலையில் தமிழரசுக் கட்சி மாநாட்டை நடாத்த தடை விதிக்க வேண்டும் என திருகோணமலை நீதிமன்றில் சாணக்கியனின் நெருங்கிய சகாவான பரா வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கை சுமந்திரனின் கனிஷ்ட சட்டத்தரனிகளான ஜெப்ரி அழகரட்ணம், புரந்திரன் ஆகியோர் தாக்கல் செய்து வாதத்தை முன்வைத்து தடை உத்தரவை பெற்றிருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் சதிகளை முறியடித்து தமிழரசுக் கட்சியின் மாநாட்டினை நடத்துமாறு தற்போதைய தலைவர் சிறீதரனிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.