அரசுக்கு எதிராக தீப்பந்த போராட்டம் ஒன்று ஐக்கிமக்கள் சக்தியினரால் கொத்மலையில் இடம்பெற்றுள்ளது.
அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.
குறித்த இப்போராட்டம் நேற்று (26) முன்னெடுக்கப்பட்டது. தவலந்தென்ன பகுதியில் ஆரம்பமான இப்போராட்டத்தில் 50க்கும் அதிகமான கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.