COPE குழு உறுப்புரிமையில் இருந்து இன்று மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
அனுர குமார திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் நேற்று COPE குழுவிலிருந்து விலகியுள்ளனர்.
COPE குழுவின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன செயற்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.