கெக்கிராவ – கனேவல்பொல வீதியில் அம்புல்கஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 12 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கெக்கிராவ ,நெல்லியகம பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. மாணவன் பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது பாரவூர்தியில் மோதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவனின் தாய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் குறித்த மாணவன் தனது பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.