ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் (Moscow) இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் தாம் உள்ளதாக ISIS அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் (Moscow) இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் தாக்குதலில் 140 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கும் தமது நாட்டிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென உக்ரைன் தெரிவித்துள்ள நிலையில் தாக்குதலின் பொறுப்பை ISIS அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.