ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை தொடர்பில் பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.