கொழும்பு – புறக்கோட்டையில் ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 20 முதல் 25 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 255 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
மொத்த விற்பனை விலை தற்போது 275 ரூபாவிலிருந்து 280 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சீனி விலை அதிகரிப்பு எதுவும் இடம்பெறவில்லை என அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஒரு கிலோ கிராம் சீனியின் மொத்த விற்பனை விலை உயர்விற்கான காரணம் குறித்து புறக்கோட்டையில் உள்ள பல மொத்த வர்த்தகர்களிடம் வினவியபோது, அதற்கான காரணத்தை வெளிப்படுத்த அவர்கள் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், அண்மைய நாட்களில் சுங்க அதிகாரிகள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையின் தாக்கத்தினால் சீனியின் விலை அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.