ஹப்புத்தளை, பிடபொல பிரதேசத்தில் வீதியோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (23) காலை நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதல்கஸ்ஹின்ன, போவத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபரின் சடலமே மீட்கப்பட்டது. குறித்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.