கண்டாவளை புளியம்பொக்கனை குமாரசாமிபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் விவசாயப்பயிர்கள், கொட்டைகை, விவசாய உபகரணங்கள், உரங்கள் என்பவை விசமிகளால் அழிக்கப்பட்டுளளது.
பயனைப்பெறக் கூடிய நிலையில் இருந்த கறிமியகாய், தக்காளி, பச்சமிளாகாய் பயிரினங்களே வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன.
விவாசயத்தை வாழ்வாதரமாக கொண்ட குறிப்பிட்ட விவசாயி அதிகளவான விலைவாசிக்கு மத்தியிலும் மிகவும் கஷ்ரப்பட்டு மேற்கொண்டு வந்த பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளமையால் மிகவும் மனமுடைந்து வேதனையுன் தனது கவலையை வெளியிட்டார்.
கிளிநொச்சியில் இவ்வாறான சம்பவங்கள் தற்போது அதிகளவில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கைகளும் உரியவர்களினால் எடுக்கப்படவில்லையெனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.