By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொள்ளும் சவுதி அரேபியா பெண்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொள்ளும் சவுதி அரேபியா பெண்!

Published March 27, 2024
Share
1 Min Read
SHARE

உலகின் பல்வேறு நாடுகள் அழகிகளுக்கான போட்டிகளை நடத்துகின்றன. அதில் வெற்றிப்பெறும் பெண்ணுக்கு அந்நாட்டு அழகு பட்டம் கொடுக்கப்படுகிறது.

அப்படி ஒவ்வொரு நாட்டு அழகிகளையும் கொண்டு உலக அழகி போட்டி நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் உலக அழகி பட்டம் வழங்கப்படும். இதற்கிடையே இந்த பிரபஞ்சத்திலேயே அழகி என்ற பட்டத்தை வெல்லும் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடத்தப்படுகிறது.

இதில் பல முக்கிய நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டு அவர்கள் திறமைகளை காட்சிப்படுத்துவர். உலகளவில் மிக செல்வாக்கான இந்த பட்டத்தை எந்த நாட்டு அழகி கைப்பற்றப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் அழகி கலந்து கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா, பெண்களுக்கு என்று தனி கட்டுபாடுகளை கொண்டுள்ளது. தங்களுக்கு என்று தனித்துவமான கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே அங்கு ஆட்சி முறையும் அமைந்துள்ளது.

சமீப காலமாக இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் தலைமையிலான ஆட்சியில், பெண்களுக்கான உரிமைகளில் தளர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு ஓட்டுநர் உரிமை, ஆண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி போன்றவை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியா சார்பாக 27 வயதான மாடல் ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) கலந்துகொள்கிறார்.

தலைநகர் ரியாத்தில் பிறந்த ரூமி, மிஸ் சவுதி அரேபியா பட்டம் வெற்றவர். அதுமட்டுமில்லாமல் மிஸ் மிடில் ஈஸ்ட், மிஸ் அரபு உலக அமைதி 2021 மற்றும் மிஸ் உமன் ஆகிய பட்டங்களையும் கொண்டுள்ளார்.

மேலும், சமீபத்தில் மிஸ் மற்றும் மிஸ்சஸ் கோபல் ஏசியன் அழகி போட்டி (Miss and Mrs Global Asian), மிஸ் ஏசியா இண்டர்நேஷனல் அழகி போட்டி (Miss Asia international) ஆகியவற்றில் சவுதி அரேபியா சார்பில் கலந்து கொண்டார்.

TAGGED: மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொள்ளும் சவுதி அரேபியா பெண்!
Editor S.Shanuja March 27, 2024 March 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article வெடுக்குநாறியில் கைதானோர் கொழும்பு ஐ.நா.வில் முறைப்பாடு!
Next Article “ஐயோ சாமி” பாடலுக்கு எடிசன் விருது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இந்திய செய்திகள்உலகச் செய்திகள்

செம்மணிப் புதைகுழி பேரவலத்தின் உச்சம்- சீமான் கண்டனம்!

June 30, 2025
உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?