தென்னாபிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவிலுள்ள மோரியா நகரத்துக்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்துக்காக பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று மாமட்லகலாவிலுள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பஸ்ஸின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, விபத்துக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.