சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் மேற்கொண்டதில் ஈரானின் இரண்டு இராணுவ தளபதிகளான ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தூதரகம் பலத்த சேதம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தூதரகத்தில் இருந்த இரண்டு ஈரான் ஜெனரல்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதில் ஒருவர் லெபனானில் குவாத்தை படையை வழிநடத்திச் சென்ற முக்கிய ஜெனரல் எனவும் இவர் 2016 வரை சிரியாவில் பணயாற்றியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.