வற்றாப்பளை கண்ணகி அம்மனை தரிசிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வழிபாட்டுக்காக சென்ற உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாடை இழந்து தடம் புரண்டதில் பதினாறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு.
விசுவமடு உழவனூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மிதுசிகன் எனும் 16 வயதுச் சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் இவருடன் பயணித்த ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.