இளம் குடும்ப பெண் அவரது குழந்தையுடன் காணாமல் போயுள்ள நிலையில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
யசோதா ஹன்சனி கஹதுடுவஆராச்சி என்ற 26 வயதுடைய பெண்ணும் அவரது 04 வயது மகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் தனது மனைவி மற்றும் மகள் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த பெண் மற்றும் அவரது மகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071-859 1639 ( கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) அல்லது 011-225 2222 (கட்டுநாயக்க பொலிஸ் நிலையம்) எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.