விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் கருத்து!
விஜயகலா தொடர்பில் நீதிமன்று விடுத்த உத்தரவு!
விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு மீதான விசாரணை இன்று(28) கொழும்பு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது விஜயகலா மகேஸ்வரன் மீது மேற்கொள்ளவேண்டிய சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமா அதிபரிடமிருந்து அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து யூன் 10ம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
2018ம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருந்ததாக விஜயகலா மகேஸ்வரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.