கிளிநொச்சி மயில்வாகனபுரத்தில் நேற்று (27) இரவு அருட்தந்தையர்கள் பயணித்த வாகனம் மீதும், அருட்தந்தையர்கள் மீதும் தாக்குதல் மேற்கோள்ளப்ப்ட்டுள்ளது.
நத்தார் நிகழ்வு ஒன்றில் கலந்துவிட்டு கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அருட்தந்தையர்கள் தெரிவித்ததாவது,
“நேற்றிரவு நத்தார் ஒன்று கூடல் நிகழ்வினை முடித்து விட்டு
ஆறு அருட்தந்தையர்கள்
கார் ஒன்றில் வீடு
திரும்பிக்கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று காரை மறித்துள்ளது.
மது போதையில் வாகனத்தை மறித்த இளைஞர்கள் அருட்தந்தையர்களிடம் பணம் கோரியுள்ளனர்.
இந்நிலையில் அருட்தந்தையர்கள் மறுப்புத் தெரிவித்த நிலையில், அவர்கள் பயணித்த வாகனம்
அடித்து உடைக்கப்பட்டதோடு, அருட்தந்தையர்கள் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இத் தாக்குதல் தொடர்பில் தர்மபுரம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது” என்று அருட்தந்தையர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள்
தர்மபுரம் பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.